1,008 சங்கு அலங்காரத்துடன் மகா சிவராத்திரி விழா


1,008 சங்கு அலங்காரத்துடன் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே உள்ள பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் 1,008 சங்கு அலங்காரத்துடன் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் 1,008 சங்கு அலங்காரத்துடன் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

சிவராத்திரி விழா

தூத்துக்குடியில் சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு மகா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவராத்திரி விழா மற்றும் சனிப்பிரதோஷம் விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரகபூஜை, லலிதா சகஸ்ர நாமம், மகாபூஜை மற்றும் தீபாரதனை நடந்தது.

1008 சங்கு அலங்காரம்

இரவு 9 மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் மஹா சிவராத்திரி வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு 1008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவரா திருவாசக பராராயணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக் குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story