ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் 1008 பால்குடம் ஊர்வலம்
ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் 1008 பால்குடம் ஊர்வலம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம்
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 27-ம் ஆண்டு ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும், ஏழாம் நாளான நேற்று காட்டுப்பாக்கத்தில் உள்ள வேம்புலி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் 1008 பேர் பால் குடங்களை தலையில் சுமந்தபடி மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் ஊர்வலமாக நடந்து வந்தனர்.
குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லை அம்மன் கோவிலுக்கு வந்தவர்கள் தலையில் சுமந்து வந்த பால் குடத்தில் உள்ள பாலை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story