அஞ்சுவட்டத்தம்மனுக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் அஞ்சுவட்டத்தம்மனுக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்
சிக்கல்:
கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அஞ்சுவட்டத்தம்மனுக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக லெட்சுமி விநாயகர் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், பூர்ணாஹுதி மற்றும் லெட்சுமி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அஞ்சுவட்டத்தம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பக்தர்கள் கோவில் சன்னதியில் இருந்து பால் குடங்களை சுமந்து நான்கு வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பக்தர்கள் கொண்டுவந்த 1,008 லிட்டர் பாலை கொண்டு அஞ்சுவட்டத்தம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், ராஜ்குமார் சுவாமிகள், கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.