அரவைக்காக 1,000 டன் நெல்


அரவைக்காக 1,000 டன் நெல்
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் இருந்து மதுரைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து மதுரைக்கு அரவைக்காக 1,000 டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாகநீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து 79 லாரிகளில் நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.


Next Story