நாகையில் இருந்து ஈரோட்டுக்கு 1,000 டன் நெல் ரெயிலில் வந்தது


நாகையில் இருந்து ஈரோட்டுக்கு 1,000 டன் நெல் ரெயிலில் வந்தது
x

நாகையில் இருந்து ஈரோட்டுக்கு 1,000 டன் நெல் ரெயிலில் வந்தது.

ஈரோடு

தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக பல்வேறு இடங்களில் இருந்து நெல், அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது.

அதன்படி நாகையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் நெல் மூட்டைகள் 20 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு வந்தது. இந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நேற்று லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story