அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 100 மேஜை, இருக்கைகள்


அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 100 மேஜை, இருக்கைகள்
x

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 100 மேஜை, இருக்கைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் மாணவர்கள் அமர்வதற்கு 100 மேஜைகள், இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் தலைமை தாங்கி மேஜை, இருக்கைகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., டோனாவூரில் கணவரை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இந்துமதி (வயது 31) என்ற பெண்ணுக்கு சொந்த செலவில் தையல் எந்திரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டோனாவூர் சேகர தலைவர் ஜே.பி.எம்.வசந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story