10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது - அமைச்சர் பொன்முடி அதிரடி...!


10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது - அமைச்சர் பொன்முடி அதிரடி...!
x

10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை,

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது,

அவசர அவசரமாக மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாஜகவுக்கு சமூக நிதி கொள்கையில் நம்பிக்கை இல்லை. தமிழக அரசின் தீர்மானத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதிமுக கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது அதிமுகவும், பாஜகவும் தான்.

10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது. மேலும்,10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story