மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 10 மினி பஸ் சேவை - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு


மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 10 மினி பஸ் சேவை - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2022 11:13 AM IST (Updated: 11 Jun 2022 11:41 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 81 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 1.13 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 1.43 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 1.51 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.59 லட்சம் பேரும் பயணித்துள்ளனர்.

மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக ஏற்கனவே மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 6 வழித்தடங்களில் 12 மினி பஸ்களை இயக்கி வருகிறது. இதை விரிவு படுத்தும் வகையில் அரசினர் தோட்டம் மெட்ரோ-தலைமை செயலகம், கிண்டி மெட்ரோ-வேளச்சேரி விஜயநகர் பஸ் நிறுத்தம், சின்னமலை மெட்ரோ-தரமணி, செனாய்நகர் மெட்ரோ-தியாகராய நகர், விமான நிலையம் மெட்ரோ-தாம்பரம் மேற்கு ஆகிய 5 வழித்தடங்களில் தலா 2 என மொத்தம் 10 மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story