வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி
x

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரூ.10 லட்சம்

விருதுநகர் பாண்டிகூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.யன் நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 59). இவரிடம் சோலைக் கவுண்டன்பட்டியை சேர்ந்த மோகன் என்பவர் கரூரை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியம் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். வெங்கடசுப்பிரமணியன் கூட்டுறவு துறையில் பெரிய அதிகாரியாக இருப்பதாகவும், கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தர முடியும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து வெங்கடசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டபடி கர்ணன் தனது இரு மருமகன்களுக்கும் கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதற்காக ரூ.10 லட்சத்தை கடந்த 11.7.2019 அன்று வெங்கடசுப்பிரமணியனின் மனைவி பிருந்தாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

வழக்கு

ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதனால் கர்ணன் பணத்தை திருப்பி கேட்ட போது வெங்கட சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பிருந்தா, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி கர்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வெங்கடசுப்பிரமணியன் அவரது மனைவி பிருந்தா மற்றும் மோகன் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story