10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கன்னியாகுமரியில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கன்னியாகுமரி
தென்தாமரைகுளம்,
கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் அறிவுரைகளின் படி, சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் இளநிலை உதவியாளர் சுதர்சிங், வரி வசூலர்கள் அமுல்ராஜ், சரோஜா, சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம் பகுதி, பீச்ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 150 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்கள் பூட்டி 'சீல்' வைக்கப்படும்' என்றார்.
----------
Related Tags :
Next Story