பழனி முருகன் கோவில் ஊழியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம்
பழனி முருகன் கோவில் ஊழியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்,
பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவிலில் முடி எடுக்கும் ஊழியர்களை கோவில் உதவியாளர் தரக்குறைவாக பேசினார் என்றும், அவரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று கூறியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னறிவிப்பின்றி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால், முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, போராட்டம் நடத்திய ஊழியர்கள் 10 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story