சுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்கள் அனுமதி இலவசம்
செஞ்சிகோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்கள் அனுமதி இலவசம்
விழுப்புரம்
செஞ்சி
செஞ்சி கோட்டையின் உள்ளே புகழ்பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கோட்டையை சுற்றி பார்க்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கமலக்கண்ணி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும் போது கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த வருடமும் இன்று முதல் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பு அலுவலர் நவீந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story