காரியாபட்டி அருகே ரூ.10 கோடி கஞ்சா அழிப்பு


காரியாபட்டி அருகே ரூ.10 கோடி கஞ்சா அழிப்பு
x

காரியாபட்டி அருகே ரூ.10 கோடி கஞ்சா அழிக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்த கஞ்சாவை அழிப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டது. அதன்படி 960 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முக்குளம், உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையில் வைத்து கஞ்சா அழிக்கப்பட்டது. தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வால் தலைமையிலும், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, விருதுநகர் சூப்பிரண்டு மனோகர், மதுரை சூப்பிரண்டு சிவபிரசாத், நெல்லை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், திருச்சுழி துணை சூப்பிரண்டு ஜெகநாதன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோர் இந்த நடவடிக்கையின்போது, அங்கு இருந்தார்கள்.

இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வால் கூறியதாவது:- கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்-அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போலீசாரால் போதை ஒழிப்பு சம்பந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது.

இது கடந்த ஆண்டைவிட அதிகம். தற்போது மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 960 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story