பரங்கிப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் கைது


பரங்கிப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் கைது
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பரங்கிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் பி.முட்லூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொடிக்கால் நகர் அருகில் உள்ள ஒரு கோழி பண்ணையில் 10 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நாகராஜன் மகன் ராதாகிருஷ்ணன், முனுசாமி மகன் கொளஞ்சிமணி, பழனிச்சாமி மகன் முத்துவேல், ராமானுஜம் மகன் செந்தில், சக்கரபாணி மகன் ராமஜெயம், மகாலிங்கம் மகன் கோகுல், வீரப்பன் மகன் நாகராஜன், மாரிமுத்து மகன் வீரமணி, சுந்தரம் மகன் ரவி, குப்பன் மகன் சிவகுரு ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணன் உள்பட 10 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 230 மற்றும் 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story