வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 1 ஆண்டு சிறை


வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 1 ஆண்டு சிறை
x

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

விக்கிரமசிங்கபுரம் வராகபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவா் பிச்சம்மாள் (வயது 78). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் பிச்சமாள் கழுத்தில் அணிந்திருந்த 56 கிராம் தங்க சங்கிலியைப் பறித்து சென்றார்.

இதுகுறித்து பிச்சம்மாள் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த இசை செல்வன் என்ற செல்வன் (26) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைச்செல்வன் குற்றம் சாட்டப்பட்ட இசை செல்வனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story