சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
x

செந்துறை அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

வாகன சோதனை

திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின் பேரில் மயிலாடுதுறை சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா கொடுக்கூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகன டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது 1 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.

2 பேர் கைது

விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நக்கம்பாடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (58) என்பவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story