1 லட்சம் இலவச மின்இணைப்புகளால் விவசாய உற்பத்தி பெருகும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு


1 லட்சம் இலவச மின்இணைப்புகளால் விவசாய உற்பத்தி பெருகும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு
x

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 1 லட்சம் இலவச மின்இணைப்புகளால் விவசாய உற்பத்தி பெருகும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 1 லட்சம் இலவச மின்இணைப்புகளால் விவசாய உற்பத்தி பெருகும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மக்கள் தொகை

மதுரை மாவட்டம், 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஒத்தக்கடையில் ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற மின்சார பெருவிழா நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். மக்கள் தொகையின் அளவு அதிகரித்து வருவதால் வருங்காலத்தில் மின்சாரம் மிக அதிகமான அளவில் தேவைப்படுவதாக இருக்கும். மக்கள் தொகைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் புதிய தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்பினையும் அதிகமான அளவில் உருவாக்கிக் கொண்டு வருகின்றார்.

விவசாய உற்பத்தி அதிகரிக்கும்

தமிழகத்தில் 33 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித்திறனாக இருக்கும் மின் உற்பத்தியை 70 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வரும் ஆண்டுகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கும்.

விவசாயிகள் மானாவரி நிலங்களில் அறுவடை செய்யும் விளைபொருட்களின் உற்பத்தியைக்காட்டிலும், தோட்டக்கலையின் மூலமாக விவசாயம் செய்யும் போது விளைபொருள்களின் உற்பத்தித்திறன் அதிகமாக உள்ளன.

கிணறுகள்

கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு கிராமத்திலும் ஆங்காங்கே கல்தூண் இருக்கும். அந்த தூணில் கண்ணாடி ஜாடிக்குள் விளக்கினை ஏற்றி வைத்திருப்பர். அரிக்கன் விளக்கு பயன்பாடு என்பதும் அதிகமான அளவில் இருந்தது. ஆனால் தற்போது மின்சார மயமாகி விட்டது. அனைத்திற்கும் மின்சாரம் முக்கிய தேவையாக இருக்கிறது. கிராமப்புறங்களில் 99 சதவீத பேர் குடிநீரை கிணறுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தினர். வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலங்களில் ஆடி மாதம் மழை பெய்தவுடன் பயறு வகைகள், கம்பு, சோளம் உள்ளிட்ட இடுபொருட்களை விதைத்து பருவத்தே பயிர்செய் என்ற அடிப்படையில் விவசாயிகள் விவசாய தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது இயற்கையின் மாறுபாட்டினால் மழை பொழியும் காலமும் மாறுபட்டு காணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story