உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை


உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 July 2023 12:30 AM IST (Updated: 13 July 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தென்காசி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. சந்தைகளில் 1 கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே நியாயமான விலையில் தக்காளி பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக தோட்டக்கலை மலை பயிர்கள் துறையின் டான்ஹோடா விற்பனை மையம் மூலம் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் 1 கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தென்காசி உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண் வணிக துணை இயக்குனர் சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், தோட்டக்கலை இயக்குனர் தங்கம், தோட்டக்கலை அலுவலர் சுந்தர்ராஜ், உதவி அலுவலர்கள் பாலு, கிருஷ்ணராஜ், கோவிந்தராஜன், துணை வேளாண்மை அலுவலர் மாரியப்பன், உதவி வேளாண் அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story