கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் சாலை மேம்பாட்டு பணி


கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் சாலை மேம்பாட்டு பணி
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் சாலை மேம்பாட்டு பணி தொடக்க விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுரண்டை ரோடு வாய்க்கால் பாலம் முதல் பெரியகுளம் கரை வரை, வடக்கு சிவகாமிபுரம் நாடார் தெரு, வணிகர் கீழத்தெரு மற்றும் 2-ம் நம்பர் ரோடு ஆகிய பகுதிகளில் பழுதடைந்த தார்சாலையை மேம்பாடு செய்தல் பணி தொடக்க விழா நடைபெற்றது. கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல்அலுவலர் ஜா.மாணிக்கராஜ், துணைத்தலைவர் கி.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பொ.சிவபத்மநாதன் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செ.கோடிஸ்வரன், மு.மாலதிமுருகேசன், கு.ஜெயசித்ராகுத்தாலிங்கம், க.இசக்கிராஜ், ரா.விஜிராஜன், மா.இசக்கிமுத்து, தா.தேவஅன்பு, ஜெ.முத்துசெல்வி ஜெகதீசன், ம.சாமுவேல் துரைராஜ், சீ.பொன்செல்வன், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story