வரி நிலுவைத்தொகை ரூ.7 கோடி


வரி நிலுவைத்தொகை ரூ.7 கோடி
x

tax

திருப்பூர்

பல்லடம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத்தொகை ரூ.7 கோடி என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரி பாக்கி

பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டிடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5 லட்சத்து 65 ஆயிரம், தொழில் வரி ரூ.15 லட்சத்து 39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரம், கடை வாடகை ரூ.3 கோடியே 15 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகை நிலுவையில் இருக்கிறது.

நகராட்சியில், பஸ் நிலையம், அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்த வேண்டும். இல்லை என்றால், 18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

எனவே பொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக்கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக கட்டணம் செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் பல்லடம், கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் வரிவசூலில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story