வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு
வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வளர்ப்பு மகள்
பவானியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் ஏற்கனவே திருமணம் முடிந்த ஒரு பெண்ணுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் முதல் கணவர் இறந்துவிட்டதால், 15 வயதான 2-வது மகளையும் தனது வீட்டிலேயே வைத்து பராமரித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த நபர் மது பாட்டிலை வீட்டுக்கு வாங்கி சென்றார். அங்கு மனைவிக்கும், வளர்ப்பு மகளுக்கும் மதுவை ஊற்றி கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார். குடிபோதையில் மனைவி தூங்கிய பிறகு வளர்ப்பு மகளை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதன்பிறகு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி அவர் மீண்டும் மதுவை வீட்டுக்கு வாங்கி சென்றார். அப்போது அவரது வளர்ப்பு மகள் மட்டும் வீட்டில் இருந்தார். அவரை மது குடிக்க சொல்லி அவர் கட்டாயப்படுத்தினார். ஆனால் அவர் மது குடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதை பொறுத்து கொள்ள முடியாத அந்த சிறுமி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.
வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார்் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அவர், வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1½ லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.