ஆலையில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கடலூர் அருகே ஆலையில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்
கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஏழுமலை, ஏட்டு ராஜா மற்றும் போலீசார் கடலூர் தாலுகா பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த அரிசி ஆலையை சோதனை செய்தனர். அப்போது அந்த அரிசி ஆலையில் 1,600 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி ஆலை உரிமையாளர் தாட்சாயணி, அரிசியை வாங்கி விற்ற செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story