விருதுநகரில் நாளை புத்தகத்திருவிழா
மாவட்டத்தில் முதன் முறையாக விருதுநகரில் புத்தகத்திருவிழா நாளை தொடங்குகிறது. இதனை அமைச்சர்கள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்ெதன்னரசு தொடங்கி வைக்கின்றனர்.
மாவட்டத்தில் முதன் முறையாக விருதுநகரில் புத்தகத்திருவிழா நாளை தொடங்குகிறது. இதனை அமைச்சர்கள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்ெதன்னரசு தொடங்கி வைக்கின்றனர்.
புத்தகத்திருவிழா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் மற்றும் மாணவருடைய புத்தக வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்த புத்தகத்திருவிழா விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக நடைபெறும் புத்தகத்திருவிழா விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா 27-ந் தேதி வரை நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத்திருவிழாவை நாளை மாலை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
விழா நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
கலைநிகழ்ச்சிகள்
வருகிற 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை புத்தகத்திருவிழா வளாகத்தில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும், மாலை 3 மணி முதல் 4 மணி வரை பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பல்வேறு இலக்கிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெற உள்ளது. எனவே புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறேன் என கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.