குழந்தைகள் தின விழா
Children's Day Celebration
ராணிப்பேட்டை
ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் ஸ்ரீபாலாஜி லோகநாதன் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் பள்ளி முதல்வர் ஜாய்ஸ் இன்பகுமாரி, மெட்ரிக் பள்ளி அகாடமிக் இயக்குனர் என்.கோமதி, நர்சிங் கல்லூரி முதல்வர் சிவசக்தி, துணை முதல்வர் ஞானதீபா மற்றும் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story