மக்கள் பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும்


மக்கள் பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும்
x

People should eat traditional food

வேலூர்

காட்பாடி

பாரம்பரிய உணவுகளை மக்கள் சாப்பிட வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடியில் நடந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் பேசினார்.

பாரம்பரிய உணவு திருவிழா

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் காட்பாடியில் பாரம்பரிய உணவு திருவிழா இன்று நடந்தது. இதில் பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

கேழ்வரகு, தினை, சாமை, வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதில் கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பாரம்பரிய உணவினை வாங்கி சாப்பிட்டனர்.

பின்னர் நடைபெற்ற விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். பாரம்பரிய உணவுகளை சமைத்து வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு பரிசு வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பாரம்பரிய உணவுகள்

பாரம்பரிய உணவுகளை அந்தகால மக்கள் சாப்பிட்டு நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தனர்.

தற்போது நவீன காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வந்ததால் அதனை உண்பவர்கள் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மக்கள் பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமலு விஜயன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, தாசில்தார் ஜெகதீஸ்வரன், கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story