4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது
அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் திடீரென நேற்று மரணம் அடைந்தார்.
கோவை
அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் திடீரென நேற்று மரணம் அடைந்தார்.
அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. மகன்
கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் அம்மன் அர்ச்சுணன். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 39). இவர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக இருந்தார்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
இதையடுத்து அவர் மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல் தகனம்
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோபாலகிருஷ்ணன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இறந்தார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கோவை உக்கடம் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திருநகரில் உள்ள வீட்டுக்கு மதியம் 3 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதன்பின்னர் கோபாலகிருஷ்ணனின் உடல், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலையில் வீரகேரளத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.