குமராட்சி அருகே பெண்கள் பால்குட ஊர்வலம்


குமராட்சி அருகே பெண்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 10:34 AM IST)
t-max-icont-min-icon

குமராட்சி அருகே பெண்கள் பால்குட ஊர்வலம்

கடலூர்

காட்டுமன்னார்கோவில்

குமாராட்சி அருகே சர்வராஜன் பேட்டை கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதே பகுதியில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் இருந்து மேளதாளம் இசைக்க பெண்கள் பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். தொடர்ந்து சிதம்பரம் சீனிவாசன் குழுவினரின் காத்தவராயன் கதை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story