இளம் நட்சத்திரம் 'அர்ஷ்தீப் சிங்'


இளம் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங்
x

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணிக்காக விளையாடும் அர்ஷ்தீப் சிங் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகிறார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத் திரம் பும்ராவின் இடத்தை, தன்னுடைய பந்துவீச்சினால் நிரப்பியிருக்கும் அவர், வீசும் முதல் ஓவர்களிலேயே சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுகிறார். 23 வயதே ஆகும், இந்த இளம் நட்சத்திரத்தின் சுவாரசிய தகவல்கள் இதோ...

பிறப்பு

இவர் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். ஆனால் சண்டிகரின், கராஹருக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

விளையாட்டு

சண்டிகரின் ஜி.என்.பி.எஸ். பள்ளி அணிக்காக 13 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.

ஹாட் டிரிக்

23 வயதிற்குட்பட்டோருக்கான சி.கே.நாயூடு டிராபி போட்டியில், ஹாட் டிரிக் எடுத்து, அசத்தினார்.

மதிப்பு

சுட்டிக் குழந்தையாக இந்திய அணியில் நுழைந்திருக்கும் இவரின் இன்றைய மதிப்பு, எவ்வளவு தெரியுமா...? 6 கோடி ரூபாய்.

தந்தை


அர்ஷ்தீப் சிங்கின் தந்தை தர்ஷன் சிங், சி.ஐ.எஸ்.எப். மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இப்போது, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றுகிறார்.

ஐ.பி.எல்.

2019-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல்.போட்டியில் அர்ஷ்தீப் சிங், அதிகம் கவனிக்கப்பட்டார். ஏனெனில் இளம் வயதிலேயே, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையுடன், ஐ.பி.எல்.போட்டி தொடரின் 2-வது அதிகபட்ச விக்கெட் டேக்கர் என்ற பெருமையும் பெற்றார்.

சைக்கிள் பயணம்

கிரிக்கெட் பயிற்சிக்காக 14 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய சூழலில், இவரது தாயார் பல்ஜித் கவூர் தினமும் சைக்கிளில் அழைத்து சென்று வருவாராம்.


Next Story