லாப்ஸ்டர் இறால்களை உயிருடன் சமைப்பது ஏன்? - சமையல் கலைஞர் கார்டன் ராம்சே


லாப்ஸ்டர் இறால்களை உயிருடன் சமைப்பது ஏன்? - சமையல் கலைஞர் கார்டன் ராம்சே
x

கடல் நண்டுகள் இறந்தவுடன் இவை பெரும் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி நச்சுப்பொருட்களை வெளியிடத் தொடங்கிவிடும்.

பெரிய கடல்நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர்(lobsters) எனப்படும் பிரமாண்ட இறால் போன்ற ஓடு கொண்ட கடல் உயிரிகளில் நச்சு பாக்டீரியாக்கள் அதன் தசையில் இயல்பாகவே உற்பத்தியாகின்றன. கடல் நண்டுகள் இறந்தவுடன் இவை பெரும் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி நச்சுப்பொருட்களை வெளியிடத் தொடங்கிவிடும். எனவே கடல் நண்டுகளை உயிருடன் சமைப்பது அவசியமாகிறது.

நண்டுகளுக்கு மூளை கிடையாது என்பதால் வலி கிடையவே கிடையாது என்று பொருளல்ல. நமக்கு காயம்படும்போது வலியை உணர வைக்கும் ஹார்மோனான கார்டிசோல் நண்டுகளுக்கும் உண்டு. எனவே வெப்பத்தில் தசை சிதையும்போது நண்டின் பின்புறம் துடிப்பது வலியினால்தான். நண்டுகளை 15 நிமிடம் ஐஸில் வைத்து, பின் வெந்நீரில் அமிழ்த்தி சமைத்தால் அதற்கு வலிக்காது என்பது சுவாரசிய கற்பனை. அது சமையல் நுணுக்கத்திற்காக செய்யப்படும் வேலை.


Next Story