வோல்வோ எக்ஸ்.சி 40 அறிமுகம்


வோல்வோ எக்ஸ்.சி 40 அறிமுகம்
x

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் சுவீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனம் சுற்றுச் சூழலைப் பாதிக்காத பேட்டரியில் இயங்கும் காரை எக்ஸ்.சி 40 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.55.90 லட்சம். இது பெட்ரோல் மாடலை விட சுமார் ரூ.11.40 லட்சம் அதிகமாகும். இருப்பினும் இதில் எரிபொருள் செலவு கிடையாது. சொகுசு கார்களில் பேட்டரியில் இயங்கும் காராக வந்துள்ளது.

இதில் உள்ள பேட்டரி இரண்டரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 418 கி.மீ. தூரம் வரை ஓடும். இது 408 ஹெச்.பி. திறனையும் 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.

இதை ஸ்டார்ட் செய்து 4.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் டிஜிட்டல் டயல் மற்றும் ஆண்ட்ராய்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

இதன் மேற்கூரை திறந்து மூடும் வகையிலானது. வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி கொண்டது. ஏ.டி.ஏ.எஸ். தொழில்நுட்பம் மற்றும் பிரிவு 2 தானியங்கி ஓடும் வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டது. இனிய இசையை வழங்க இதில் ஹர்மான் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.


Next Story