இரட்டையர்கள் கிராமம்


இரட்டையர்கள் கிராமம்
x

இன்று... போர்க்கள பூமியாக மாறியிருக்கும் உக்ரைனின் வெலிகயா கோபன்யா கிராமம் ‘இரட்டையர்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.

4 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 61 ஜோடி இரட்டையர்கள் வாழ்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தக் கிராமம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

2004-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 2, 3 ஜோடி இரட்டையர்கள் இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார்கள். ''எங்கள் கிராமத்தில் இரட்டையர்கள் பிறப்பது சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு இல்லை.

மிக வயதான 3 ஜோடி பாட்டிகள் இங்கே வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் முந்தைய தலைமுறைகளில்கூட இரட்டையர்கள் கணிசமாக இருந்ததாகச் சொல்கிறார்கள்'' என்கிறார் கவுன்சிலர் மர்யானா சவ்கா. இந்த நிலத்தில் மட்டும் அதிக அளவில் இரட்டையர்கள் பிறப்பதற்குக் காரணம், இந்த ஊர் தண்ணீர் என்கிறார்கள்.

உக்ரைன் விஞ்ஞானிகள் தண்ணீரைப் பரிசோதித்துப் பார்த்ததில், அப்படி எந்தச் சிறப்பும் இந்தத் தண்ணீரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தினமும் வெளியூர் ஆட்கள் இங்கே வந்து தண்ணீரைப் பிடித்துச் செல்கிறார்கள். வசந்த காலத்தில் கோன்ஸ்டானின் என்பவர் 50 கி.மீ. தூரத்தில் இருந்து வந்து, தண்ணீரைப் பல டிரம்களில் எடுத்துச் சென்று, விற்றுவிடுகிறார்! தண்ணீர் மூலம் குழந்தை பிறக்கிறதோ, இல்லையோ இந்தப் பகுதியிலேயே மிக சுத்தமான, சுவையான தண்ணீர் இது என்கிறார்கள்.


Next Story