காடுகளின் காவலன் புலிகள்
ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் புலிகள் பாதுகாப்பு மற்றும் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு புலிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்து வந்தது. ஆனால், வேட்டைத் தடுப்பு, வனப் பாதுகாப்பு, புலிகள் சரணாலயம் போன்ற அரசின் நடவடிக் கைகளால் இன்று புலிகள் பாதுகாக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளன. நம் நாட்டில் 51 புலிகள் சரணாலயங்கள் உள் ளன. மத்தியப் பிரதேசத் தில் 526 புலிகளும், கர்நாடகத்தில் 524 புலிகளும் அதற்கு அடுத்ததாக தமிழகத்தில் தற்போது 229 புலிகளும் வசிக்கின்றன. புலிகளைக் காப்பதன் மூலம் வனத்தை பாதுகாக்க முடியும். அது பல்லுயிர் பெருக்கத் துக்கு வித்தாக அமையும். எனவே, புலிகள் மீதான பாதுகாப்பு மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டும். காடுகளின் சமநிலை கெடுதலை தவிர்க்கவே "ப்ராஜெக்ட் டைகர்" என்னும் திட்டம் 1973-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் ஏப்ரல் 1-ந் தேதி ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் தொடங்கப் பட்டது. அதன் பின் புலிகள் வாழும் தகுதிகள் உள்ள காடுகள் ஒவ்வொன்றும் அடையாளம் காணப்பட்டு அவைகள் புலிகளின் சரணா லயங்களாக அறிவிக் கப்பட்டு உச்ச வனச் சட்டங்களால் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டன.
புலிகள் காக்கப்படும் போது மறைமுகமாக நமது உன்னத காட்டு வளமும் பாதுகாக்கப் படுகிறது என்பதை உணர வேண்டும். புலிகளை போன்ற பேருயிர்களுக்கான உன்னதத்தை மனிதன் உணர்ந்து நடந்து கொள்ள பழகினால் புலிகளின் வாழ்வு சிறப்படைவதோடு, இயற்கை மேம்பட்டு மனிதர்களின் வாழ்க்கையும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். புலிகள் தினம் இந்தாண்டு தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமை யும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. காரணம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் புலிகள் தினம் அனுசரிக் கப்பட்டாலும், புலிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனமும், பொறுப்பும் இந்தியாவிற்கு அதிகமாகவே உள்ளது.
காரணம், ஒட்டுமொத்தமாக உலக அளவில் உள்ள புலிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் இந்திய வனப்பரப்பில் வசிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள 4 ஆயிரம் புலிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசின் அறிக்கையின் படி, இந்தியாவில் மட்டும் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் உள்ளன. புலிகள் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பும் அவசியம் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.
இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதில், கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் 4 ஆக இருந்த புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம். இது தமிழ்நாட்டிற்கான பெருமை தரக் கூடிய விசயமாகும்.
வனத்தில் உள்ள உணவு சங்கிலியை பாதுகாப்பதுடன், புலிகளுக்கான நீர் ஆதாரங்களையும் உறுதி செய்வதால், வனத்திற்கு மட்டுமின்றி, மனித இனத்திற்கும் புலிகள் இன்றியமை யாதது. புலிகள் காப்பகம் அனைத்தும் நீர் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கிறது. சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பகம் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதி யிலும், களக்காடு முண்டத்துறை காப்பகம் கன்னியாகுமரி ஜீவா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், வைகை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகமும் அமைந் துள்ளது. முக்கியமான அணை களான பவானி ஆணை, திருமூர்த்தி ஆணை, பரம்பிக்குளம் ஆழியாறு ஆணை உள்ளிட்டவை அருகே புலிகள் காப்பகம் அமைந்துள்ளன. நாம் புலிகளை காத்தால், புலிகள் நம்மையும்நம் இயற்கையையும் காப்பாற்றும்.