பி.எம்.டபிள்யூ. கிராண்ட் லிமோசின்
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 3 சீரிஸில் கிராண்ட் லிமோசின் காரை அறிமுகம் செய்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள இந்நிறுவன ஆலையில் இந்த சொகுசு கார்கள் தயாராகின்றன. மிகவும் நீளமான, அதிக இட வசதி கொண்ட, சொகுசான வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த ஆடம்பரமான, அதிநவீன ஓட்டும் செயல்பாடுகளைக் கொண்ட காராக இது வந்துள்ளது. இதில் இரண்டு வேரியன்ட்கள் (பி.எம்.டபிள்யூ. 330 எல்.ஐ. ஸ்போர்ட், 320 எல்.டி. எம். ஸ்போர்ட்) வந்துள்ளன. விலை முறையே ரூ.57,90,000 மற்றும் ரூ.59,50,000. ஆடம்பர கார்களில் எத்தகைய சவுகரியங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. வெள்ளை, கிரே, கருப்பு, நீலம் ஆகிய கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது.
இது 258 ஹெச்.பி. திறனையும், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 6.2 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். டீசல் மாடலில் 7.6 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டலாம். இதில் 8 ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. உள்பகுதியில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேயும், 14.9 அங்குல கண்ட்ரோல் டிஸ்பிளேயும் உள்ளது. பி.எம்.டபிள்யூ. கனெக்டட் டிரைவ் செயலி மூலம் காரில் கூடுதல் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளது.
இனிய இசையை வழங்க 16 ஸ்பீக்கர்கள் உள்ளன. டிஜிட்டல் சாவி உள்ளதால் காரின் அருகே நெருங்கியவுடன் கதவுகளின் பூட்டு திறந்துவிடும். ரிமோட் லாக்கிங் வசதி கொண்டது. இதை ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தலாம். பாதுகாப் பான பயணத்திற்கு இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. பக்கவாட்டு மோதல் தவிர்ப்பு, மோதல் எச்சரிக்கை, குழந்தைகள் பயணிக்க ஐ-சோபிக்ஸ் இருக்கை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.