டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்


டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்
x

டெக்னோ நிறுவனம் போவா 3 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.9 அங்குல முழு திரையைக் கொண்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 88 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

சில்வர், கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதில் 7 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 25 வாட் சார்ஜருடன் இது வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.9,999.


Next Story