சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்கள்


சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்கள்
x

சோனி நிறுவனம் மூன்று வயர்லெஸ் ஸ்பீக்கர்களை எஸ்.ஆர்.எஸ்.எக்ஸ்.ஜி 300, எஸ்.ஆர்.எஸ்.எக்ஸ்.இ 300 மற்றும் எஸ்.ஆர்.எஸ்.எக்ஸ்.இ 200 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இது எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலானது. உயர் தரத்திலான இசையை அறை முழுவதும் பரவச் செய்யும் திறன் கொண்டது. நேரலை நிகழ்ச்சி இசை பரவலைத் தேர்வு செய்தால் அதேபோல் துல்லியமான இசையைக் கேட்டு மகிழ முடியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டி.எஸ்.பி. தொழில் நுட்பம் காரணமாக இசை 360 டிகிரி கோணத்தில் பரவும்.

மேலும் இதில் உள்ள லைன்-ஷேப்பர் டிப்யூசர் தொழில் நுட்பம் சீராக இசை பரவ உதவுகிறது. இவை அனைத்தும் 25 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியவை. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 70 நிமிடம் செயல்படும்.

சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் இதன் மேல் பாகத்தில் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன் படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்.இ 300 மாடல் விலை சுமார் ரூ.10,990. எக்ஸ்.இ 200 மாடல் விலை சுமார் ரூ.12,990. எக்ஸ்.ஜி 300 மாடல் விலை சுமார் ரூ.26,990.


Next Story