ஆஸ்திரேலிய பாலைவனத்தில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறை கண்டுபிடிப்பு!
பெர்த் நகரில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பவளப்பாறைகளை அடையாளம் கண்டுள்ளனர்.
பெர்த்,
ஆஸ்திரேலிய பாலைவனத்தின் நடுவில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுலர்போர் சமவெளியில் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுல்லார்போர் சமவெளி இப்போது 76,000 சதுர மைல் பாலைவனமாக மாறியுள்ளது. நுலார்போர் சமவெளி எந்தவொரு உயிர்வாழும் அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்ற கருத்து முறியடிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அசல் கடல் படுக்கை அமைப்பு, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பாலைவனம் முன்பு கடலால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சுமார் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய செனோசோயிக் காலத்தில், இந்த பவளப் பாறைகள் கடலின் கீழ் மூழ்கி இருந்ததாக நம்பப்படுகிறது.
பெர்த் நகரில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எர்த் மற்றும் பிளானட்டரி சயின்ஸ்(பூமி மற்றும் கிரக அறிவியல் பள்ளி) விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த பவளப்பாறைகளை அடையாளம் கண்டுள்ளனர்.
பொதுவாக, ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பில் 18 சதவீத பாலைவனமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா பல நூறு மில்லியன் ஆண்டுகளாக கடல் மற்றும் மழைக்காடுகளால் சூழப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பவளப்பாறை அமைப்பு 3,950 முதல் 4,250 அடி விட்டம் கொண்டது என்று நியூஸ்வீக்கில் வெளிவந்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.