பிரம்பு அறைகலன்கள், அலங்காரப் பொருட்கள்


பிரம்பு அறைகலன்கள், அலங்காரப் பொருட்கள்
x

மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்த ரத்தன் எனப்படும் பிரம்புபனை செடியின் பகுதிகளைக் கொண்டு செய்யப்படும் வீட்டு உள் அலங்கார பொருட்கள் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளன.

இந்த பிரம்புபனை என்பது தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் உள்ள மரங்களின் விழுதுகள் மற்றும் கிளைகளில் ஏறும் ஒரு வகை கொடியாகும்.நம்மில் பலருக்கு மூங்கிலால் செய்த பொருள்களையும், பிரம்பு மற்றும் அதனுடைய மிலாறுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களையும் வித்தியாசம் கண்டறிவதில் சிரமம் இருக்கின்றது.அது போன்ற சந்தேகங்களை தீர்த்துக்கலாம் வாங்க.

கேன்: பிரம்பு

இது பலவிதமான வலை மற்றும் நெசவு வடிவங்களில் அறைகலன்கள் மற்றும் உள் அலங்காரப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.இது நவநாகரீக மற்றும் உறுதியான பொருட்களை உருவாக்க பயன்படுகின்றன.இந்த ரத்தன் செடியிலிருந்து தயாரிக்கப்படும் மிலாறுகளை மரச்சாமான்கள் மற்றும் கூடைகளைத் தயாரிக்க உபயோகப்படுத்துகிறார்கள்.கேனிங் என்பது கேபினட் கதவுகள், நாற்காலிகளின் முதுகுகள் மற்றும் இருக்கைகளில் பொதுவாக மரச்சாமான்களில் ரத்தன் செடியின் பிரம்பு அல்லது பிரம்பு தோலைப் பயன்படுத்துவதாகும்.

விக்கர்: நெசவு

விக்கர் என்பது பிரம்பு, வில்லோ மற்றும் ரஷ் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிப்புகளை உருவாக்க நெய்தவடிவில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும்.அலங்கார பொருட்களை வடிவமைக்க பிரம்புகளை முறுக்கி,வளைத்து செய்கிறார்கள்.

கேன்,விக்கர்,ரத்தன்

இவை மூன்றிற்கு இடையேயும் நுட்பமான வேறுபாடுகள் இருந்தபோதிலும்,இவை அனைத்தையும் தனி அலங்காரத்தில் சேர்க்கலாம்.ஒரு மெல்லிய நெசவு விண்டேஜ் கேன் நாற்காலியை விக்கர் படுக்கைக்கு அருகில் ஜோடியாக வைக்கலாம்.கேன் அல்லது விக்கர் இயற்கையான, நுட்பமான சாயல் மற்றும் அமைப்பு கொண்டதாகும். டை-அப் குஷன்கள், வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அமைப்புகளில் வரும் நெய்யப்பட்ட ஓய்வு இருக்கை ஆகியவை அவை இருக்கும் இடத்திற்கு நேர்த்தியான மற்றும் எளிமையான தோற்றத்தைத் தருகின்றன.

கேன்: அறைகலன்கள்

இவற்றால் செய்யப்படும் பொருட்கள் திடமான மற்றும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கின்றன.இலகு ரகம் மற்றும் ஆர்கானிக் பொருளான இவற்றைக் கொண்டு செய்யப்படும் மரச்சாமான்கள் நவீன மற்றும் சமகால அலங்காரத்தில் வலுவான அடையாளத்தை ஏற்படுத்துகின்றன.

விக்கரின் இயற்கையான சாயல்,ஏறக்குறைய அனைத்து அலங்கார பொருட்களுடனும் ஒத்துப்போகும் விதத்தில் அறைக்கலன்களை வடிவமைக்கிறார்கள். இவற்றின் மேல் அடிக்கப்படும் வண்ண பெயிண்ட்கள் அவற்றிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. வீட்டின் உட்புறத்தில் மட்டுமல்லாது வீட்டின் வெளிப்புற முற்றம், தோட்டம்,பார்க்கிங் ஏரியா என எங்கு வேண்டுமானாலும் இவற்றால் செய்யப்பட்ட நாற்காலிகள், மோடாக்கள்,சோஃபாக்கள், டீ டேபிள்களை எடுத்துச்சென்று உபயோகப்படுத்தலாம்.எந்த சூழ்நிலைக்கும் பொருந்துவது போல் இதன் வடிவமைப்பு இருக்கின்றது.அதிலும் குறிப்பாக பூ வடிவத்தில் வரும் சேர்கள் பார்ப்பதற்கு மட்டுமல்ல அமர்வதற்கும் அலாதியாக இருக்கின்றன.

சுவர் அலங்கார பொருட்கள்

பிரம்பு மற்றும் மிலாறுகளைக் கொண்டு செய்யப்படும் கைவினை சுவர் அலங்கார பொருட்களில் அதன் இயற்கை நிறத்தோடு வருபவையும், வண்ணங்கள் பூசப்பட்டு வருபவையும் வீட்டிற்கு ஒரு ராயல் தோற்றத்தை தருபவையாக இருக்கின்றன.பிரம்பினால் செய்யப்பட்டு ஓவியங்களை வரைந்து வண்ணம் பூசப்பட்டு வரும் சிறிய மற்றும் பெரிய அளவிலான தட்டுகள் சுவர்களை அலங்கரிக்கும் பொழுது அவற்றின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.

சமையலறை பொருட்கள்

பிரம்பு மற்றும் அதன் மிலாறுகளைக் கொண்டு செய்யப்படும் ட்ரேக்கள், பௌல்கள் மற்றும் கூடைகள் நம்முடைய டைனிங் டேபிளை அலங்கரிக்க மட்டுமல்லாது உபயோகிக்கக்கூடிய பொருட்களாகவும் இருக்கின்றன.

அலங்கார விளக்குகள்

கேன் அலங்கார விளக்குகள் தற்கால அலங்காரப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றன. மேசை விளக்குகள், சீலிங் விளக்குகள் மற்றும் சுவரில் பொருத்தக்கூடிய விளக்குகள் என பிரம்பு மற்றும் அதன் மிலாறுகளைக் கொண்டு வேலைப்பாட்டுடன் செய்யப்படும் விளக்குகள் பொதுவான சூழலுக்கு ஒரு பல்துறை அழகியல் தோற்றத்தைத் தரும் விதத்தில் இருக்கின்றன.இதுபோன்ற விளக்குகளை வீடுகளில் மட்டுமல்லாது உணவு விடுதிகளிலும் அதிக அளவில் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.பிரம்பு தரை விளக்கு மற்றும் பெண்டன்ட் லைட்டுகள் உபயோகப்படுத்தும் இடத்திற்கு ஒரு சமகாலதோற்றத்தை கொடுக்கின்றன..

பிரம்பு அறைகலன்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் பெரும்பாலும் கடற்கரை நகரங்களில் அதிக அளவில் பயன்படுத்துவதைப் பார்க்க முடியும்..இவற்றால் செய்யப்படும் பொருட்கள் மிகவும் உறுதியான வையாகவும் ,குறைந்த பராமரிப்பு கொண்டவையாகவும் இருப்பதால் இவற்றை வாங்கி உபயோகிப்பதில் மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.


Next Story