பியூர் இ.வி. மோட்டார் சைக்கிள்


பியூர் இ.வி. மோட்டார் சைக்கிள்
x

ஹைதராபாத்தைச் சேர்ந்த பியூர் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத் தாத வகையிலான மோட்டார் சைக்கிளை பியூர் இ.வி. என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோலில் இயங்கும் மோட்டார் சைக்கிளைப் போல முன்புறம் டேங்க் உள்ள வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தயாராகும் முதலாவது பேட்டரி மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் மோட்டார் சைக்கிள்கள்தான் விற்பனையாகின்றன. இதில் பேட்டரியில் ஓடக் கூடிய மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் சந்தைக்கு வரவில்லை. இந்நிலையில் பியூர் நிறுவன பேட்டரி மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த ஆண்டு இந்நிறுவனம் இ-டிரைஸ்ட் 350 என்ற பெயரிலான பிரீமியம் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்நிறுவனம் பேட்டரி ஸ்கூட்டர்களையும் தயாரிக்கிறது. தற்போது பெரும்பாலானோரைக் கவரும் வகையில் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

கருப்பு, நீலம், கிரே, சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் கிடைக்கிறது.

இதில் 3 கிலோவாட் அவர் ஏ.ஐ.எஸ். சான்று பெற்ற பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது.


Next Story