காலநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்
‘ஓக்’ வகை மரம், பருவநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது.
கடந்த வாரம் காலநிலை எப்படியிருந்தது என்று அறிய வேண்டுமானால் கூகுளில் தட்டினால் போதும். கடந்த மாதம், கடந்த வருடம் இந்த தேதி காலநிலையைக் கூட கூகுள் தேடிக்கண்டுபிடித்துத் தந்துவிடும். ஆனால், 800 வருடங்களுக்கு முன்பு உலகின் கால நிலை எப்படியிருந்தது என்பதை அறிய கூகுளால் முடியாது. மரத்தால் முடியும்.
ஆம்..! 800 வருடங்களாக இங்கிலாந்தில் கம்பீராக நின்றுகொண்டிருக்கும் 'ஓக்' வகை மரம், பருவநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். அதன் வளையங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலமாக பருவநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை துல்லியமாக சொல்லிவிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
Related Tags :
Next Story