நோக்கியா டி 21 டேப்லெட்


நோக்கியா டி 21 டேப்லெட்
x

நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது டி 21 என்ற பெயரில் புதிய மாடல் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இது 10.36 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் 2 கே ரெசல்யூஷனைக் கொண்ட எல்.சி..டி திரை உள்ளது. இதில் யுனிசாக் டி 612 ஆக்டாகோர் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதில் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு செயலி அப்டேட் அளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு சாப்ட்வேர் 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பின்புறம் 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது. முன்புறத்திலும் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இந்த டேப்லெட் நார்டிக் வடிவமைப்பைக் கொண்டது. இதன் மேல்பகுதி உறுதியான அலுமினியத்தால் ஆனது. இதில் 60 சதவீத பாகங்கள் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது.

நீண்ட நேரம் செயல்படும் வகையில் இதில் 8,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 நாட்கள் வரை நீடித்திருக்கும். வை-பை இணைப்பில் செயல்படக் கூடியது. நானோ சிம் கார்டு போடும் வசதி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் இதன் நினைவகத் திறனை 512 ஜி.பி. வரை அதிகரிக்க முடியும். இதன் விலை சுமார் ரூ.17,999.


Next Story