நோக்கியா ஜி 11 பிளஸ்
நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது ஜி 11 பிளஸ் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் யுனிசாக் டி 606 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந் துள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளம் கொண்டது. இதன் பின் புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பின்பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 நாட்கள் வரை நீடித்திருக்கும். இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. நீலம், கிரே உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது.
Related Tags :
Next Story