பின்பற்ற வேண்டிய புத்தாண்டு உறுதிமொழிகள்


பின்பற்ற வேண்டிய புத்தாண்டு உறுதிமொழிகள்
x

சில உறுதிமொழிகள் எல்லோராலும் கடைப்பிடிக்கக்கூடியவை. அவசியமாக பின்பற்ற வேண்டியவை. அத்தகைய உறுதிமொழிகள் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும்போது சில உறுதிமொழிகளை எடுப்பது பலரது வழக்கம். ஆண்டு முழுவதும் அவற்றை பின்பற்றி வாழ வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தாலும் ஒருசில உறுதிமொழிகளையே உண்மையில் நிறைவேற்றுவார்கள். பெரும்பாலானவற்றை பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். அவற்றுள் சில உறுதிமொழிகள் எல்லோராலும் கடைப்பிடிக்கக்கூடியவை. அவசியமாக பின்பற்ற வேண்டியவை. அத்தகைய உறுதிமொழிகள் பற்றி பார்ப்போம்.

உடல் எடையை குறைப்பது

உடல் பருமன் அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் புத்தாண்டு உறுதிமொழி எடுக்கும்போது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதனை சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றவும் செய்வார்கள். நாளடைவில் போதிய கவனம் செலுத்த மாட்டார்கள்.

அது உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிவிடும். ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது. அதைப் பின்பற்றுவது சற்று கடினமானதுதான். குறிப்பாக இரவில் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும். அதற்கு மாற்றாக நட்ஸ் வகைகளை சாப்பிட பழகுவது நல்லது.

உடற்பயிற்சி செய்வது

ஜிம்மிற்கு செல்வது அல்லது உடற்பயிற்சி செய்வது நிறைய பேர் எடுக்கும் மற்றொரு புத்தாண்டு உறுதிமொழியாகும். இதனை பின்பற்றுவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதி நிறைய தேவை. அது நிறைய பேருக்கு இருப்பதில்லை. போதிய நேரம் கிடைப்பதில்லை என்று நேரத்தின் மீது பழி போடுகிறார்கள்.

வாரத்திற்கு குறைந்தது 5-6 முறை ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அங்கு சென்று வெறித்தனமாக பயிற்சிகளை செய்வார்கள்.

ஜனவரி மாதம் முடியும் வரை அந்த வெறித்தனம் நெஞ்சில் குடிகொண்டிருக்கும். அடுத்த மாதமே அதனை தொடர்வதில் தொய்வு ஏற்பட தொடங்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் உடற்பயிற்சி செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு உரிய நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பணத்தை சேமிப்பது

நிறைய பேர் எடுக்கும் மற்றுமொரு பொதுவான புத்தாண்டு உறுதிமொழி, செலவுகளைக் கட்டுப்படுத்துவது. இந்த ஆண்டு முதல் தேவையற்ற செலவுகளை தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்து, சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலரும் புத்தாண்டு தீர்மானம் இயற்றுவார்கள்.

அதையும் சில மாதங்கள் செயல்படுத்தி பார்ப்பார்கள். வார நாட்களில் எல்லாம் கடைப்பிடித்து வந்த சிக்கனத்தை விடுமுறை நாளில் தகர்த்தெறிந்துவிடுவார்கள். அந்த சமயத்தில் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த பழகிக்கொண்டாலே சிக்கனம் சாத்தியமாகிவிடும். சேமிக்கும் எண்ணத்தை அதிகப்படுத்திவிடும்.

புகைப்பிடிப்பதை நிறுத்துவது

புகைப் பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரிந்தும் அதனை கைவிட முடியாமல் நிறைய பேர் தவிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் எடுக்கும் உறுதிமொழிகளில் புகைப்பழக்கத்தை நிறுத்தும் உறுதிமொழி கட்டாயம் இடம் பெற்றிருக்கும். சிலர் புத்தாண்டின் முதல் நாளில் புகைப்பழக்கத்தை கைவிடுவார்கள்.

வார இறுதி நாட்கள் வரை அதை பின்பற்றுவார்கள். பின்பு ஒரே ஒரு சிகரெட் மட்டும் புகைப்போமே என்று மீண்டும் தொடங்கி விடுவார்கள். அந்த எண்ணம் தலைதூக்காமல் பார்த்துக்கொள்வது கடினமானதுதான். ஆனால் பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை.

சமூக ஊடகங்களை கையாள்வது

சமூக ஊடகங்கள் பலருடைய வாழ்வாதாரத்தை வளப்படுத்தி இருக்கிறது. தங்களுடைய படைப்புகளை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தி வருமானம் ஈட்டுகிறார்கள். அதனை எந்த அளவுக்கு பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமானது.


Next Story