மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ


மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ
x

பல புதிய அம்சங்களை புகுத்தி மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ மாடலை இந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்வது கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனமாகும். இந்நிறுவனத் தயாரிப்புகளில் வென்யூ மாடல் மிகவும் பிரபலம். இதில் தற்போது பல புதிய அம்சங்களை புகுத்தி மேம்படுத்தப்பட்ட மாடலை இந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலாக வந்துள்ள இந்த காரில் முன்புற பம்பர் மற்றும் கிரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல பின்புற விளக்குகளின் வடிவமைப்பும் மேலும் அழகுற மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது வழக்கம்போல 1.2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலில் கிடைக்கிறது. டீசல் மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் உள்ளது.

இதில் பிரீமியம் வேரியன்ட்டாக என் மாடல் உள்ளது. இதில் ஒரு லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலை மட்டும் அறிமுகம் செய்ய உள்ளது.


Next Story