நவீன கஜினி முகமது...! 10 ஆண்டுகளாக போராடி கிடைத்த 'கூகுள் வேலை'


நவீன கஜினி முகமது...! 10 ஆண்டுகளாக போராடி கிடைத்த கூகுள் வேலை
x

பெங்களூருவைச் சேர்ந்த அட்வின் ராய் நெட்டோ என்பவர்தான், அந்த நவீன காலத்து கஜினி முகமது.

ன்றைய இளைஞர்களுக்கு தங்கள் பணி என்பதில் முக்கிய இலக்காக இருப்பது வெளிநாட்டு வேலை. அப்படி இல்லாவிட்டால், இந்தியாவில் தலைசிறந்த நிறுவனங்களில் வேலையில் சேர்வது விருப்பமாக உள்ளது.

அமேசான், கூகுள், ஜேபி மோர்கன், டெலாய்ட் போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கேட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவியும். ஐ.ஐ.டி., சிறிய கல்லூரி பட்டதாரிகள், இளம் ஊழியர்கள் முதல் அதிக அனுபவம் கொண்ட ஊழியர்கள் வரையில் விண்ணப்பம் செய்யும் காரணத்தால் எப்போதுமே போட்டி என்பது கடுமையாகவே இருக்கும். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகள் விடா முயற்சியுடன் பயணித்து, தனது கனவு நிறுவனமான கூகுளில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார், ஒரு இளைஞர்.


10 வருட போராட்டத்தில் ஒவ்வொரு முறையும்

தவறுகளை திருத்திக் கொண்டு, வெற்றிக்கனியைப் பறித்தேன். திறமைகளை வளர்த்துக் கொண்டு, எனது இலக்கை அடைந்தேன். எனவே, யாராக இருந்தாலும், தோல்வியைக் கண்டு துவளக் கூடாது, அது நமது வெற்றிக்கான படிக்கட்டு என்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.

பெங்களூருவைச் சேர்ந்த அட்வின் ராய் நெட்டோ என்பவர்தான், அந்த நவீன காலத்து கஜினி முகமது. இவர் தனது கனவு நிறுவனமான கூகுளில் சுமார் 10 வருடம் தொடர்ந்து விண்ணப்பித்து, நேர்முக தேர்வுகளில் கலந்துகொண்டு, இறுதியாக இம்முறை இலக்கை எட்டி இருக்கிறார்.

இவருக்கு மொபைல் மற்றும் வெப் அப்ளிகேஷன்ஸில் 12 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஆனாலும், கூகுள் நிறுவன தேர்வில் பலமுறை தோல்வியை தழுவினார் அட்வின் ராய். இந்தநிலையில், கூகுள் நிறுவனம் அண்மையில் நடத்திய யூ.எக்ஸ்.டிசைனர் தேர்வில் பங்கேற்று வெற்றிக்கொடி நாட்டினார். விரைவில் கூகுள் நிறுவனத்தில் அட்வின் ராய் சேர இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "வலைத் தளங்களில் நாம் பல வெற்றிக் கதைகளை பார்த்து இருப்போம். ஆனால், அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான உழைப்பு, கடின முயற்சியை அறிந்து கொள்ள வேண்டும்.

10 வருட போராட்டத்தில் ஒவ்வொரு முறையும் தவறுகளை திருத்திக் கொண்டு, வெற்றிக்கனியைப் பறித்தேன். திறமைகளை வளர்த்துக் கொண்டு, எனது இலக்கை அடைந்தேன். எனவே, யாராக இருந்தாலும், தோல்வியைக் கண்டு துவளக் கூடாது. அது நமது வெற்றிக்கான படிக்கட்டு என்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்" என்று தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் விண்ணப்பங்களைப் பெறுகிறது. இவற்றில் இருந்து பல நூறு பேர் மட்டுமே வேலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story