மாருதி சுஸுகி பிரெஸ்ஸா


மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
x

மாருதி சுஸுகி நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடலான பிரெஸ்ஸாவில் மேம்பட்ட அம்சங்களைப் புகுத்தி புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.7.99 லட்சம். பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.13.96 லட்சம்.

இதில் 1.5 லிட்டர், கே 15 சி ரக என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 103 ஹெச்.பி. திறனையும், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இது 5 கியர்களைக் கொண்டது. ஆட்டோமேடிக் மாடலில் 6 கியர்கள் உள்ளன. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20. 15 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்டோமேடிக் மாடல் ஒரு லிட்டருக்கு 19.80 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. முந்தைய மாடலை விட இதன் உயரம் 45 மி.மீ. அதிகமாகும். கிளாம்ஷெல் பானெட், இரட்டை எல்.இ.டி. முகப்பு விளக்கு கிரில் கன்மெட்டல் ஷேடில் உள்ளது.

பின்புற வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரட்டை வண்ணக் கலவையில் இவை வந்துள்ளன. இதில் 16 அங்குல இரு வண்ணத்திலான சக்கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. உள்புறத்திலும் டேஷ்போர்டு இரட்டை வண்ணத்தில் (கருப்பு மற்றும் பிரவுன்) இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 9 அங்குல ஸ்மார்ட்பிளே புரோ பிளஸ் தொடு திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே ஆகிய இணைப்பு வசதி கொண்டவையாக வந்துள்ளது. ஸ்டீயரிங்கிலேயே பலவகை யான கட்டுப்பாட்டு சுவிட்சுகள் உள்ளன.

இதில் ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங், பின்புற வென்ட், குரல்வழி கட்டுப்பாடு, குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், யு.எஸ்.பி. சார்ஜிங் பகுதி, திறந்து மூடும் மேற்கூரை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. பாதுகாப்பான பயணத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. இது தவிர ஏ.பி.எஸ்., இ.பி.எஸ்., இ.பி.டி., ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஐசோபிக்ஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.


Next Story