மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300. டர்போ ஸ்போர்ட்


மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300. டர்போ ஸ்போர்ட்
x

எஸ்.யு.வி. கார்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி 300. மாடலில் ஸ்போர்ட் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10.35 லட்சம். பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.12.90 லட்சம். இந்த மாடலில் 1.2 லிட்டர் எம் ஸ்டாலியோன் டி.ஜி.டி.ஐ. என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 130 பி.எஸ். திறனை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். நான்கு கண்கவர் வண்ணங்களிலும், 3 புதிய இரட்டை வண்ணங்களிலும் இது வந்துள்ளது. சிவப்பு கிரில் உள்பகுதி, கருப்பு ரியர் வியூ மிரர், உள்புறம் கருப்பு வண்ணம், குரோமியம் கைப்பிடி, இரட்டை வண்ண வெளிப்பகுதி ஆகியவற்றுடன் ஸ்போர்ட் மாடலாக இது வந்துள்ளது.


Next Story