மேம்படுத்தப்பட்ட கவாஸகி வெர்சிஸ் 650


மேம்படுத்தப்பட்ட கவாஸகி வெர்சிஸ் 650
x

கவாஸகி நிறுவனத் தயாரிப்புகளில் சமீபகாலமாக மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலான வெர்சிஸ் 650 தற்போது மேம்படுத்தப்பட்ட சில அம்சங்களைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் முகப்பு வடிவமைப்பு கூர்மையானதாக வெர்சிஸ் 1000 மாடலில் உள்ளதைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல எல்.இ.டி. முகப்பு விளக்கு வடிவமும், நான்கு நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான விண்ட் ஸ்கிரீன் மற்றும் புதிய கிராபிக் ஸ்டிக்கர் ஆகியன வும் இதற்கு புதிய தோற்றப் பொலிவை அளிக்கிறது. இதேபோல டி.எப்.டி. தொடுதிரை வடிவமும் மாற்றப்பட்டுள்ளது.

புளூடூத் இணைப்பு வசதி, டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி கொண்டதாக இது வந்துள்ளது. இது 66 ஹெச்.பி. திறன், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 649 சி.சி. திறனை வெளிப்படுத்தும் இரட்டை என்ஜின் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பரைக் கொண்டது.

முன்புறம் 300 மி.மீ, பின்புறம் 220 மி.மீ. அளவிலான டிஸ்க் பிரேக் கொண்டு உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.7.45 லட்சம்.


Next Story