ஜிப்மர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


ஜிப்மர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 24 July 2022 4:05 PM IST (Updated: 24 July 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி ஜிப்மர் நிறுவனத்தில் 2022-ஆம் ஆண்டில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் நிறுவனத்தில் நர்சிங் அதிகாரி, எக்ஸ்-ரே டெக்னீஷியன் (ரேடியோதெரபி, ரேடியோ-நோயறிதல்), ஆய்வக தொழில்நுட்பவியலாளர் என 139 பணி இடங்கள் நிரப்ப்பட உள்ளன.

பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி ரேடியோதெரபி மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நர்சிங் ஆபீசர் பதவிக்கு 35 வயது, மற்ற பணி இடங்களுக்கு 30 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-8-2022.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Next Story