ஜாகுவார் எப்-பேஸ்
ஜாகுவார் நிறுவனம் எப்-பேஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் இது முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பெரிய அளவிலான லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 19.2 கிலோவாட் அவர் திறன் கொண்டதாகும். இதனால் கார் ஓடும் தூரம் அதிகபட்சம் 65 கி.மீ. வரை அதிகரித்துள்ளது. பேட்டரியின் திறனும் 20 சதவீதம் அதிகமாகும். இந்த பேட்டரியின் 80 சதவீதம் 30 நிமிடத்தில் சார்ஜ் ஆகிவிடும்.
இது 404 பி.எஸ். திறனையும் 640 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதனால் ஸ்டார்ட் செய்து 5.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும்.
Related Tags :
Next Story