காற்றிலிருந்து நீரை தயாரிக்கும் வாட்டர்ஜென்


காற்றிலிருந்து நீரை தயாரிக்கும் வாட்டர்ஜென்
x

இஸ்ரேலைச் சேர்ந்த வாட்டர்ஜென் நிறுவனம் புதிதாக காற்றிலிருந்து தண்ணீரை தயாரிக்கும் இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக எம்.எம்.வி. ஜெய்புரியா குழுமத்துடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீரை தயாரிக்கும் திறன் கொண்டது.

இது மிகவும் தூய்மையானது. இதை குடிநீராக பயன் படுத்தலாம். இந்த இயந்திரங்கள் நாளொன்றுக்கு 30 லிட்டர் முதல் 6 ஆயிரம் லிட்டர் வரையிலான வெவ்வேறு அளவுகளில் குடிநீரை அளிக்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப் பட்டுள்ளன. இவற்றின் விலை சுமார் ரூ.2.5 லட்சம்.

பள்ளி, மருத்துவமனைகள், பொழுதுபோக்கு மையங்கள், விடுதிகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், தற்காலிய மையங்கள் மற்றும் கிராமங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். இதை எளிதில் நிறுவ முடியும். வீடுகளுக்கான மின் இணைப்புகளில் இதை பயன்படுத்தலாம். தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவுவதோடு சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும் இது வழி வகுக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி இது தண்ணீரை அளிக்கிறது.


Next Story